அதிர்ச்சி வேண்டாம்; வலைப்பதிவில் சுந்தர ராமசாமியின் ஏஜெண்ட் [நன்றி: பாலபாரதி], புளியமரம் தங்கவேலே சொன்னது தான் தலைப்பில் இருப்பது.
நேற்று மயிலாப்பூர் சங்கீதாவில், நடந்த குறுவலைப்பதிவாளர் சந்திப்பில் நடந்தது தான் இது. நான், அமெரிக்க மாப்பிள்ளை ப்ரியன்(நன்றி: வரவனை செந்தில்), தலை பாலபாரதி, தோப்புக்காரர் தங்கவேல் (தனிப் புளியமரம் தோப்பாகாது என்று அவர், கதறக் கதறச் சொன்னாலும் நேற்று பாலா சூட்டிய புதிய பெயர் இது!) நால்வரும் உணவுக்கு ஆர்டர் கொடுக்குமுன்னமேயே அந்தப் பிரச்சனை துவங்கியது.
எதையோ பேசும்போது, வழக்கம்போல, நான் தான் ஆரம்பித்து வைத்தேன். “உங்க சு.ரா. மாதிரி மேஜிகல் ரியலிஸம்..” என்று தொடங்கிய ஒரு வாக்கியத்தை நான் சொல்லவும், தங்கவேல் உடனடியாகக் கொதித்தெழுந்து விட்டார்.
“சுந்தர ராமசாமி மேஜிகல் ரியலிஸம் எல்லாம் பேச மாட்டார்! அதெல்லாம் பின்நவீனத்துவவாதிகள் பேசுவது” என்றார்.
உடனே நம்ம பாலபாரதி, “அப்ப சு.ரா. பேசுவது நவீனத்துவம் இல்லங்கிறீங்களா?” என்று கேட்க,
தங்கவேல் உடனடியாக, “சு.ரா. ஒரு யதார்த்தவாதி” என்றாரே பார்க்கலாம்!
அவ்வளவு தான், அடுத்த பத்து இருபது நிமிடங்கள், பாலாவும் தங்கவேலும், யதார்த்தவாதம், மாயாவாத யதார்த்தவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், குண்டூசிநவீனத்துவம் என்று பேசிக் கொண்டே போக, நானும் ப்ரியனும், எதார்த்தவாதிகளாக மெனு கார்டை நோண்டத் தொடங்கினோம்.
ஒரு கட்டத்தில், “சு.ரா ஒரு நவீனத்துவ யதார்த்தவாதி” என்ற முடிவை தங்கவேல் அறிவிக்க, “இப்ப மட்டும் சுகுணா திவாகர் இங்க இருந்தா நல்லார்ந்திருக்குமே! ” என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டேன்.
பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மதர்குலம் – அதாங்க, ஆங்கிலத்திலேயே பேசும் சென்னை தாய்க்குலம் – விட்டால் கையை நீட்டி பாலாவின் தலையில் படுஜோராக ஒரு குட்டு குட்டிவிடுவார் போல் இருந்தது. அந்தக் கண்கொள்ளாக் காட்சிக்காக நான் காத்திருக்கையில், அந்தப் பெண்மணி பொறுமை இழக்க சில நொடிகள் முன்பு, சர்வர் வந்து ஆர்டர் கேட்டதால், பாலா மயிரிழையில் உயிர் தப்பித்துவிட்டார்..
ஞாயிறன்று கல்யாணச் சாப்பாடு சாப்பிடப் போன இடத்தில் கூட பாலாவைப் பேச விடாமல் எங்கிருந்தோ ஒரு அனானிக் குரல் வரவும், “கொலசாமிக்குப் படையல் வச்சிடறேன்” என்று கும்பிடு போட்டுக் கொண்டு, தங்கவேலுக்கு வழிவிட்டு, மௌனமாக சாப்பிட்டார். பாலாவின் கருத்துச் சுதந்திரத்திற்கு இத்தனை தொல்லையா! கொலசாமிகள் தான் காப்பாத்தணும்…
தமிழ்வலைப்பதிவுகளில், பின்நவீனத்துவத்தின் பாதுகாவலரான வெளியே மிதக்கும் ஐயா [நன்றி: பின்னூட்டம் பாலா
], தங்கவேல் சொன்னதைப் பற்றி தங்கள் கருத்து என்னவோ?
1:00 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
என்னையும் பெரிய ஆளாக்கிடனும்னு நீங்க கங்கணம் கட்டி வேலை செய்வதுபோல் தெரியுது. ம்..ம்.. நடத்துங்க, நடத்துங்க
1:07 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
புளி தங்கம்,
தலைவர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.
உதாரணத்துக்கு பாருங்க, பாலா மாம்ஸுக்க்கு பிறக்கும் போதே தெரியுமா என்ன இந்த மாரி அவருக்கு தனி பதிவெல்லாம் தொடங்கப்படும்னு… அதப்போல தான்!
1:16 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
Appadi pooodu….Anga Baalaabukku Nachhunu Oru Adi Kidachithee Athai Sollaliyee Neenga ?
1:44 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
/“சு.ரா ஒரு நவீனத்துவ யதார்த்தவாதி/
உண்மைதான், ஆனால் மோசமான எதார்த்தவாத எழுத்தாளர்.
/ பின்நவீனத்துவத்தின் பாதுகாவலரான வெளியே மிதக்கும் ஐயா /
நக்கலு? மவளே இருக்குது ஆப்பு!
1:59 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
//நக்கலு?//
)
ஏன், பதிவுலக நக்கலுக்கும் full rights வாங்கியாச்ச்சா?
3:11 பிற்பகல் இல் பெப்ரவரி 27, 2007
//அவ்வளவு தான், அடுத்த பத்து இருபது நிமிடங்கள், பாலாவும் தங்கவேலும், யதார்த்தவாதம், மாயாவாத யதார்த்தவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், குண்டூசிநவீனத்துவம் என்று பேசிக் கொண்டே போக, நானும் ப்ரியனும், எதார்த்தவாதிகளாக மெனு கார்டை நோண்டத் தொடங்கினோம்.//
எனக்கு ஒரு வார்த்தை(%^&&*%^*$#^) கூட புரியல, பாலாபாய் புரிஞ்சிகினு தான் பேசனாரா? யாராவது நேருல பார்த்தவங்க சொல்லுங்க பா??!!
//நக்கலு? மவளே இருக்குது ஆப்பு!//
பொன்ஸ் ஏம்மா உனக்கு இந்த வேலை!!! பார்த்தயா நம்ம மிதக்கும் ஐயா கோவிச்சுக்கிட்டாரு!
5:14 மு.பகல் இல் பெப்ரவரி 28, 2007
ஒவ்வொருவருக்கும் ஒரு மானசீக எதிரி தேவைப்படுகிறது. (நன்றி சு. ரா). அந்தவகையில் நம்ம ‘மிதக்கும் வெளி’ சுகுணாவிற்கு சு. ரா தான் மானசீக எதிரி என நினைக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரை (சு. ரா) தாக்குவதையே மனிதர் தனது குறிக்கோளாக வைத்துள்ளார்.
7:01 மு.பகல் இல் பெப்ரவரி 28, 2007
இவ்வளவு வலுவில்லாத எதிரியாக ஒருவரை கட்டமைத்துக்கொண்ட வெளியெ மிதக்கும் அய்யா பரிதாபத்துக்கு உரியவர்தான்.
அப்புறம்.. மாம்ஸ், அடிக்க வரும் அளவிற்கு என்ன செய்தீர்கள் அந்த சென்னை மதரை
6:38 பிற்பகல் இல் ஏப்ரல் 9, 2008
நீண்டகாலமாக செயல்படாமல் பா.க.ச தளத்தை வைத்திருந்தால் விரைவில் “தொண்டர் பாக.ச” அல்லது மறுமலர்ச்சி பாக.ச. தொடங்கப்படும் என்பதை வரலாற்றின் தேவை கருதி எச்சரிப்பதோடு, அண்ணன் பாலபாரதியின் ரத்தத்தை சிறிஞ்சால் உறிஞ்சி சுவரெழுத்து எழுதி மக்களைத் திரட்டும் நிலை வரும் எனவும் நச்சரிக்கிறோம்… மன்னிகவும் எச்சரிக்கிறோம்.
(முன்பு போல் ஒழுங்காக சந்தாப் பணம் வருவதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது. உரிய விசாரணைக் ‘கமிஷன்’ அண்ணன் லக்கி தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதற்கு கணக்கு வழக்கு பார்க்கும் பணியில் காலநேரம் பார்க்காமல் உழைக்கத் தயார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)
இவண்,
பா.க.ச.
“பாலபாரதியைத் தற்கொலைக்கு தூண்டும் படை அணி”